துமகூருவில், போலீஸ் வாகனத்தின் மீது லாரி மோதி உதவி சப்–இன்ஸ்பெக்டர் சாவு


துமகூருவில், போலீஸ் வாகனத்தின் மீது லாரி மோதி உதவி சப்–இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 21 March 2017 3:20 AM IST (Updated: 21 March 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு மாவட்டம் கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஸ்வேசுவரய்யா(வயது 51).

பெங்களூரு

துமகூரு மாவட்டம் கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விஸ்வேசுவரய்யா(வயது 51). இவர், தனது குடும்பத்துடன் கியாதசந்திரா அருகே வசித்து வந்தார். மேலும் இவர், கர்நாடக தீயணைப்பு துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரேவண்ணாவின் உறவினர் ஆவார். நேற்று முன்தினம் இரவு கியாதசந்திரா அருகே பெங்களூரு–புனே தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் வாகனத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வேசுவரய்யா தனியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு லாரி, போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் வாகனம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த உதவி சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வேசுவரய்யா பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதுகுறித்து கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடிவருகிறார்கள்.


Next Story