பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் தொடர்ந்து போராட்டம்
அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள உயர்வு, பணிநிரந்தரம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள உயர்வு, பணிநிரந்தரம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஆன பின்பும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் அவர்கள், சுதந்திர பூங்கா முன்பு உள்ள சேஷாத்திரி சாலையில் திடீரென்று படுத்துக் கொண்டனர். ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் சேஷாத்திரி சாலையில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Next Story