லாஸ்பேட்டையில் இந்தியன் வங்கி கருவூலம் நாராயணசாமி திறந்து வைத்தார்


லாஸ்பேட்டையில் இந்தியன் வங்கி கருவூலம் நாராயணசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 March 2017 4:00 AM IST (Updated: 21 March 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டையில் இந்தியன் வங்கி கருவூலம் முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை இந்தியன் வங்கி கிளை கல்லூரி சாலையில் இயங்கி வந்தது. தற்போது அந்த கிளை லாஸ்பேட்டை மெயின் ரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே வங்கியின் கருவூலம் மற்றும் ஏ.டி.எம். ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் பட்டாச்சார்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதிய கிளை மற்றும் கருவூலத்தை ரிப்பன்வெட்டி திறந்துவைத்தார். அதன்பின் வங்கி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். ஏ.டி.எம். மையத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து திறந்துவைத்தார். இந்த புதிய கருவூலத்திலிருந்து புதுவை பகுதியிலுள்ள 30 இந்தியன் வங்கி கிளைகளுக்கு ரூபாய் நோட்டுகள் வினியோகிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் தேவராஜ், லாஸ்பேட்டை கிளை மேலாளர் மனோகரன் உள்பட வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story