நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 211 பேர் கைது
நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 211 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராசையா தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, “ 34 ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 25–ந் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் எங்கள் சங்கமும் பங்கேற்கும்“ என்றார்.
211 பேர் கைது
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 211 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 166 பெண்கள் ஆவார்கள். அவர்களை போலீசார் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story