வெளிநாட்டு குளிர்பானங்களை அடியோடு ஒதுக்க வேண்டும் வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


வெளிநாட்டு குளிர்பானங்களை அடியோடு ஒதுக்க வேண்டும்  வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 March 2017 2:00 AM IST (Updated: 21 March 2017 6:06 PM IST)
t-max-icont-min-icon

“வெளிநாட்டு குளிர்பானங்களை அடியோடு ஒதுக்க வேண்டும்“ என்று வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

“வெளிநாட்டு குளிர்பானங்களை அடியோடு ஒதுக்க வேண்டும்“ என்று வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடியில், நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், வருகிற மே மாதம் 5–ந்தேதி சென்னை தீவு திடலில் நடக்க உள்ள வணிகர் உரிமை பிரகடன மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், நாட்டு மக்களின் சுய தொழில்களை பாதிக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க வேண்டும்.

உலக ஒப்பந்தத்தில் இருந்து சுய தொழில்களை காப்பாற்ற வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை அடியோடு ஒதுக்க வேண்டும், இரவு நேரங்களில் 11 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் பொன் தனகரன், கருணாகரன், மாநில இணை செயலாளர்கள் நடராஜன், ஈசுவரன், மாவட்ட சட்ட ஆலோசகர் வக்கீல் சொக்கலிங்கம், நகர பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story