சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு 25–ந் தேதி நேர்காணல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் 25–ந் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் 25–ந் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது.
பணியிடங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 70 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 310 சத்துணவு உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்காக சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 922 விண்ணப்பங்களும், உதவியாளர் பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 868 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இதில் வயது, கல்வி தகுதி, இனச்சுழற்சி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் அமைப்பாளர் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 261 விண்ணப்பங்களும், உதவியாளர் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 221 விண்ணப்பங்கள் என மொத்தம் 482 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
நேர்முக தேர்வுநிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் http://www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தற்போது நிராகரிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு வருகிற 25–ந்தேதி (சனிக்கிழமை) நேர்காணல் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணிக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அசல் சான்றுகளுடன், நேர்முக தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.