பெற்றோர் வேலைக்கு செல்ல கூறியதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு சாவு
கூடுவாஞ்சேரியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு சாவு பெற்றோர் வேலைக்கு செல்ல கூறியதால் விபரீத முடிவு
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ராஜ்பரத் (வயது25). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு எம்.பி.ஏ. படித்துள்ளார். கத்தாரில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த அவர், பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். 6 மாதமாக வேலை இல்லாமல் ராஜ்பரத் வீட்டில் இருந்தார். மீண்டும் மேல் படிப்பு படிக்கப்போவதாகவும் எனவே வேலைக்கு போகவில்லை என்றும் தனது பெற்றோரிடம் ராஜ்பரத் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவரது பெற்றோர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ராஜ்பரத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.