உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியீடு பெண் மீது போலீசில் புகார்


உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் படங்கள் வெளியீடு பெண் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 22 March 2017 3:11 AM IST (Updated: 22 March 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

பெங்களூரு,

 அந்த மாநில முதல்–மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 19–ந் தேதி பதவி ஏற்றார். இந்த நிலையில், முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கர்நாடக மாநில மகளிர் அமைப்பை சேர்ந்த பிரபா என்.பெலவங்களா என்பவர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்திருந்தார். மேலும் அவரை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் சில படங்களை பிரபா என்.பெலவங்களா வெளியிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் படங்களை வெளியிட்ட பிரபா என்.பெலவங்கா மீது பா.ஜனதா இளைஞரணி சார்பில் பெங்களூரு சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரை பெற்றுக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story