குமரி மாவட்டத்தில் 59 குளங்கள் புனரமைப்பு; கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 59 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகிறது என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கோதையாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் உள்ள குளங்களில், குடிமராமத்து முறையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யவும், விவசாயின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்–அமைச்சர் குடிமராமத்து முறையில் குளங்களை புனரமைக்க 2016–17–ம் ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பணிகளை தொடங்கி வைத்து, அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.
59 குளங்கள் தேர்வு
அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் உள்ள குளங்களில் 59 குளங்களை தேர்வு செய்து, ரூ.1.95 கோடி செலவில் குடிமரமாத்து முறையில் குளங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தோவாளை தாலுகா புத்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இறச்சகுளம் கிராமத்தில் உள்ள நாரக்குளத்தில் ரூ.4 லட்சம் செலவிலும், இறச்சகுளம் பெரியகுளத்தில் ரூ.4 லட்சம் செலவிலும், திடல் ஊராட்சி பூதப்பாண்டி கிராமத்தில் உள்ள புதுகுளத்தில் ரூ.3 லட்சம் செலவிலும், தெரிசனங்கோப்பு கிராமத்தில் உள்ள கேசவநேரி குளத்தில் ரூ.5 லட்சம் செலவிலும், தெள்ளாந்தி குளத்தில் ரூ.5 லட்சம் செலவிலும், திருப்பதிசாரம் கிராமத்தில் உள்ள வேம்பத்தூர் குளத்தில் ரூ.5 லட்சம் செலவிலும், அஞ்சுகிராமத்தில் உள்ள பிராந்தநேரி குளத்தில் ரூ.5¾ லட்சம் செலவிலும், கன்னியாகுமரி பேரூராட்சி குமரி சாலை குளம் ரூ.4 லட்சம் செலவிலும், விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் குடிமராமத்து முறையில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது.
அறிவுரை
இதனை ஆய்வு செய்து பணிகளை துரிதபடுத்தி முடித்திட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கோதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதார அமைப்பு) சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி என்ஜினீயர் வின்சென்ட் லாரன்ஸ், செய்தி– மக்கள் தொடர்பு அதிகாரி காந்தி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி (செய்தி) செய்யது முகம்மது மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story