பூட்டிக்கிடக்கும் கிராம மருத்துவமனையை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கீழையூரில் பூட்டிக்கிடக்கும் கிராம மருத்துவமனையை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் அரசு சார்பில் கிராம மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இயங்கி வந்தது. இந்த மருத்துவமனைக்கு கீழையூர், திருமணங்குடி, மேலப்பிடாகை, வாழக்கரை, மீனம்பநல்லூர், ஈசனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து சென்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டரும், ஒரு செவிலியரும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மருத்துவமனை செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் மருத்துவமனையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கீழையூர் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் கிராம மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பூட்டியே கிடக்கும் கிராம மருத்துவமனையை தரம் உயர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

Next Story