புதுமையான பறக்கும் பைக்


புதுமையான பறக்கும் பைக்
x
தினத்தந்தி 30 March 2017 2:00 PM GMT (Updated: 2017-03-30T11:44:30+05:30)

மோட்டார் பைக்கும், ஹெலிகாப்டர் இறக்கைகளும் கலந்த வகையில் புதிய மாதிரியில் பறக்கும் பைக் ரஷியாவில் தயாராகி உள்ளது.

‘ஹோவர்சர்ப் ஸ்கார்பியான்’ எனப்படும் இந்த பைக், ஒரு நபரை சுமந்து கொண்டு குறைந்த உயரத்தில் பறக்கும் திறன் கொண்டுள்ளது. இதற்கு சக்கரங்கள் கிடையாது. நான்கு கால்கள் தட்டையாக இணைக்கப்பட்டு தரையிறங்க ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

கால்களின் மீது பைக்கை அந்தரத்தில் உந்தித்தள்ள ஏதுவாக 4 இறக்கைகளும் உள்ளன. சிறிய ஸ்டார்ட்டர் பொத்தான் உதவியுடன் இதை எளிதாக மேலே உயர்த்தலாம். ஹெலிகாப்டர்போல செங்குத்தாக மேலெழும்பும் திறன் கொண்டது. பரிசோதனை முறைகளில் வெற்றி பெற்றுவிட்ட பறக்கும் பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளிலேயே பைக்குகள் வெகு சாதாரணமாக வீதிகளில் பறக்கத் தொடங்கிவிடும் என்பதில் ஆச்சரியமில்லை!

Next Story