காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-30T20:26:30+05:30)

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலையில் நடந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலையில் நடந்தது. நகர தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் தமிழக விவசாயிகளை அவதூறாக பேசியதாக கூறி பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டிப்பதாக கூறி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், பொருளாளர் பொன்னுச்சாமி பாண்டியன், வட்டார தலைவர்கள் உமா சங்கர், அய்யாத்துரை, நகர துணை தலைவர் பங்காருசாமி, ராமச்சந்திரன், ராஜசேகரன், மாரிமுத்து, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story