கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-30T21:41:01+05:30)

திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள வில்லாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65).

தொண்டி,

திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள வில்லாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவரது மகள் நந்தினி அருள் சுலோச்சனா(19). இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள தியாகவன்சேரி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நந்தினி அருள் சுலோச்சனா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் தாமோதரன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் தனது தந்தை வீட்டில் இருந்த நந்தினி அருள் சுலோச்சனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சிலைமணி விசாரணை நடத்தி வருகின்றார். இறந்து போன நந்தினி அருள் சுலோச்சனாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் பேபி, திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு நெக்லரின் எஸ்கால் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.


Next Story