பெரும்பாறை பகுதியில் கொடிகளில் மிளகு பறிக்கும் பணி தொடக்கம் விளைச்சல் பாதிப்பால் தரம் குறைவு


பெரும்பாறை பகுதியில் கொடிகளில் மிளகு பறிக்கும் பணி தொடக்கம் விளைச்சல் பாதிப்பால் தரம் குறைவு
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 30 March 2017 6:08 PM GMT)

பெரும்பாறை பகுதியில் கொடிகளில் இருந்து மிளகு பறிக்கும் பணி தொடங்கியது.

பெரும்பாறை,

திண்டுககல் மாவட்டம் பெரும்பாறை பகுதியில் உள்ள மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, குப்பமாள்பட்டி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைககாடு, பெரியூர், பாச்சலூர், பூலத்தூர், சோலைக்காடு போன்ற மலைப்பகுதிகளில் அதிக அளவு மிளகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் மிளகு சீசன் தொடங்கி உள்ளது. இதையடுத்து கொடிகளில் இருந்து மிளகு பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பறிக்கப்படும் பச்சை மிளகு தரம் பிரித்து பெரும்பாறை, கே.சி.பட்டி, மஞ்சள்பரப்பில் உள்ள கமி‌ஷன் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

விலை உயர்வு

இந்த பகுதியில் விளையும் மிளகை வியாபாரிகள் வாங்கி, திண்டுககல் மற்றும் கேரளாவுக்கு விற்பனைககாக கொண்டு செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ கருப்பு மிளகு ரூ.580– முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ பச்சை மிளகு காம்புடன் ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால், மிளகின் விளைச்சலும், தரமும் குறைந்துள்ளது. மிளகு வரத்து குறைந்ததால் வரும் காலத்தில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story