உளுந்தூர்பேட்டையில் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு


உளுந்தூர்பேட்டையில் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 March 2017 11:30 PM GMT (Updated: 30 March 2017 6:25 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து

உளுந்தூர்பேட்டை,

தஞ்சாவூரில் உள்ள அரிசி மில்லில் இருந்து 25 கிலோ எடை கொண்ட 420 மூட்டைகளில் 10 ஆயிரத்து 500 கிலோ அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. லாரியை தஞ்சை மாவட்டம் நெய்வாசலை சேர்ந்த முருகையன் (வயது 52) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த லாரி நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலத்தில் அதிகாலை 5.30 மணியளவில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த லாரி, நடுரோட்டிலேயே கவிழ்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் லாரி டிரைவர் முருகையன் லேசான காயமடைந்தார். மேலும் இந்த விபத்தினால் உளுந்தூர்பேட்டை– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணியளவில் வாகன போக்குவரத்தை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

பின்னர் மாற்று லாரியை போலீசார் வரவழைத்து அந்த லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, காலை 9 மணியளவில் ‘கிரேன்’ வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story