மனைவியின் நடத்தையில் சந்தேகம் டி.கல்லுப்பட்டி அருகே பெண்ணின் கழுத்தை நெறித்து கொன்ற கணவர் கைது


மனைவியின் நடத்தையில் சந்தேகம் டி.கல்லுப்பட்டி அருகே பெண்ணின் கழுத்தை நெறித்து கொன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 31 March 2017 3:15 AM IST (Updated: 31 March 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி அருகே சந்தேகத்தின் பேரில் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்,

திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வெங்கடாசலபுரம். இந்த ஊரைச்சேர்ந்தவர் ஞானகுமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ரேவதி (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று, ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவி மீது ஞானகுமார் சந்தேகமடைந்ததால், அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இன்றி இருந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த ஞானகுமார், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

தலைமறைவு

இதுகுறித்து அவரின் தம்பி கார்த்திக் என்பவரிடம், நான் ரேவதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவளை கொலை செய்து விட்டேன் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார். தகவலறிந்த வி.சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானகுமாரை கைது செய்தனர்.


Next Story