திருவள்ளூர் அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டவருக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 March 2017 10:00 PM GMT (Updated: 2017-03-31T01:30:50+05:30)

தனசேகர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு அங்கு ஓவியம் வரைந்து கொண்டிருந்தவரை தகாத வார்த்தையால் பேசி கொலை செய்வதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்றார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தலகாஞ்சேரியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தலகாஞ்சேரியை சேர்ந்த தாஸ் (வயது 47) உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ் ஓவியர் மூலம் பள்ளி வகுப்பறைக்குள் ஓவியங்களை வரைய சொல்லி இருந்தார். ஓவியர் படம் வரைந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சவிதா என்பவரது கணவர் தனசேகர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு அங்கு ஓவியம் வரைந்து கொண்டிருந்தவரை தகாத வார்த்தையால் பேசி கொலை செய்வதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்றார். இது குறித்து தாஸ் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தனசேகரை தேடி வருகின்றனர். 

Next Story