பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டாள் அலங்காரத்தில் ராஜகோபாலசாமி


பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டாள் அலங்காரத்தில் ராஜகோபாலசாமி
x
தினத்தந்தி 30 March 2017 9:00 PM GMT (Updated: 30 March 2017 9:00 PM GMT)

மன்னார்குடியில் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டாள் அலங்காரத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி, தென்னகத்து துவாரகை என அழைக்கப்படுகிறது. இங்கு வாசுதேவ பெருமாள் மூலவராக அருள்பாலித்து வருகிறார். உற்சவர் ராஜகோபாலசாமி. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காளிங்கநர்த்தன அலங்காரத்தில் ராஜகோபாலசாமி, 5 தலை நாகத்தின் தலையில் காலை வைத்தவாறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

ஆண்டாள் அலங்காரம்

வீதி உலாவை தொடர்ந்து தேரடி மண்டபத்தில் பட்டாடை அணிந்து ஆண்டாளாக அருள்பாலித்த ராஜகோபாலசாமியை, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து வெள்ளி அனுமந்த வாகனத்தில் வில் அம்புடன் ராமர் திருக்கோலத்தில் வீதி உலா காட்சி நடந்தது. 

Next Story