மும்பையில் கோடை காலத்தில் குடிநீர் வெட்டு இருக்காது மாநகராட்சி கமிஷனர் தகவல்

மும்பையில் கோடை காலத்தில் குடிநீர் வெட்டு இருக்காது என்று மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா கூறினார்.
மும்பை,
மும்பையில் கோடை காலத்தில் குடிநீர் வெட்டு இருக்காது என்று மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா கூறினார்.
வெயில் தாக்கம்மும்பைக்கு தன்சா, துள்சி, விகார், மத்திய வைத்தர்னா, மேல் வைத்தர்னா, மோதக் சாகர், பட்சா ஆகிய ஏரிகளில் இருந்து மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து வினியோகம் செய்து வருகிறது. தினசரி மும்பைக்கு 3 ஆயிரத்து 750 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
குடிநீர் வெட்டு இருக்காதுமும்பையில் பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்திலேயே தொடங்கும். எனவே அதுவரையிலும் நகருக்கு தேவையான தண்ணீரை வினியோகம் செய்யவேண்டும். கடந்த காலங்களில் ஏரிகளில் குறைவான நீர் இருப்பை கருத்தில் கொண்டு குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மும்பையில் குடிநீர் வெட்டு இருக்காது என மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்தது. வரும் மழைக்காலம் வரையிலும் மும்பைக்கு வினியோகம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது’ என்றார்.