உறவுக்கார பெண்ணின் ரூ.7 கோடி நகை, பணத்தை அபகரித்தவர் கைது
உறவுக்கார பெண்ணின் ரூ.7 கோடி மதிப்பிலான நகை, பணத்தை அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
உறவுக்கார பெண்ணின் ரூ.7 கோடி மதிப்பிலான நகை, பணத்தை அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.
துப்பறியும் ஏஜென்சிமும்பையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது40). இவர் துப்பறியும் ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது உறவுக்கார பெண் நுந்தன். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் ராஜேஷ், நுந்தனிடம் உனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டறிந்ததாக கூறி, அதற்கு கட்டணமாக ரூ.4 லட்சம் வாங்கி உள்ளார்.
பின்னர் நுந்தன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வருவதாக தெரிவித்த அவர், வீட்டில் உள்ள பணம் வங்கி லாக்கரில் உள்ள நகைகளை தன்னிடம் தந்து வைத்தால் பாதுகாப்பாக வைத்துவிட்டு, பின்னர் திருப்பி தருவதாக தெரிவித்தார்.
கைதுஅதன்பேரில் நுந்தன் வங்கி லாக்கரில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த பணம் என ரூ.7 கோடி மதிப்பிலான நகை, பணத்தை ராஜேஷிடம் கொடுத்து இருக்கிறார். பின்னர் அந்த நகை, பணத்தை நுந்தனிடம் கொடுக்காமல் ராஜேஷ் இருந்து வந்தார். அவற்றை நுந்தன் திருப்பிகேட்ட போது நகை, பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.
இதுபற்றி நுந்தன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்ததும் ராஜேஷ் முன்ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து போலீசார் ராஜேசை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 3–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.