தூத்துக்குடியில் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
தூத்துக்குடியில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளை போனது. வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் 22 பவுன் நகைகள் கொள்ளை போனது. வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த துணிகர கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:–
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் கனகம் (வயது 52). இவர் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 29–ந் தேதி கனகம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு, தூத்துக்குடி அருகே துரைச்சாமிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நேற்று காலையில் கனகம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கனகம் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது.
இதுபற்றி தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து இந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணைஇந்த கொள்ளை குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.