பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் தாலுகாக்களில் முதற்கட்டமாக ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்’ இன்று வினியோகம்


பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் தாலுகாக்களில் முதற்கட்டமாக ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்’ இன்று வினியோகம்
x
தினத்தந்தி 1 April 2017 1:30 AM IST (Updated: 1 April 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

புதிய ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு’கள் முதற்கட்டமாக இன்று (சனிக்கிழமை) வினியோகம் செய்யப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் தாலுகாக்களில் பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக, புதிய ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு’கள் முதற்கட்டமாக இன்று (சனிக்கிழமை) வினியோகம் செய்யப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்

நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிதாக ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்’ வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக சங்கரன்கோவில், பாளையங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இன்று ‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்‘ வழங்கப்பட உள்ளன.

நெல்லை மாவட்டத்துக்கு 45 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வரப்பெற்றுள்ளன. மீதம் உள்ள தாலுகாக்களுக்கும் படிப்படியாக ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

செல்போன் எஸ்.எம்.எஸ்.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு அச்சிடப்பட்டவர்களுக்கு, புதிய கார்டு பெறுவதற்கு, ‘ஓ.டி.பி.’ எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணானது, எஸ்.எம்.எஸ். ஆக செல்போன் எண்ணுக்கு வரும். அந்த ரகசிய குறியீட்டு எண்ணைக் கொண்டு இன்று முதல் அருகில் உள்ள ரே‌ஷன் கடைகளில் அல்லது அறிவிப்பு செய்யப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.

எனவே தங்களது செல்போனுக்கு வருகிற ‘எஸ்.எம்.எஸ்.’ வந்தால் அதை அழித்துவிடக் கூடாது. அந்த ரகசிய குறியீட்டு எண் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்போனுக்கு ரகசிய குறியீட்டு எண் வந்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளுக்கு சென்று தங்களது ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.


Next Story