கூடங்குளம் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடக்கம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.09-க்கு வினியோகம்
கூடங்குளம் 2-வது அணு உலையில் வணிக ரீதியான மின் உற்பத்தி நேற்று தொடங்கியது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.09-க்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வள்ளியூர்,

2-வது அணு உலை
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 3, 4-வது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி தற்போது முதல் அணு உலையில் சுமார் 850 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது.
2-வது அணு உலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘கிரிட்டிக்காலிட்டி‘ என அழைக்கப்படும் அணுப்பிளவு சோதனை முடிக்கப்பட்டு ஆகஸ்டு மாதம் மின் உற்பத்தி தொடங்கியது. முதலில் 250 மெகாவாட் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
வணிக ரீதியிலான மின்உற்பத்தி
அதன் பின்னர் படிப்படியாக சோதனைகள் நடத்தப்பட்டு, அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதலோடு 500 மெகாவாட், 750 மெகாவாட், 1000 மெகாவாட் என்று மின் உற்பத்தியின் அளவு உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்குவதற்கு அணுமின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி நேற்று 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. பகல் 11 மணி அளவில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், தற்போது 930 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தென்னக மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுள் ளது.
ரூ.4.09-க்கு வினியோகம்
2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாக உற்பத்தி செலவை கணக்கிட்டு ரூ.1.22-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது வணிக ரீதியிலான மின்உற்பத்தி தொடங்கிய பின்பு 4 ரூபாய் 9 காசுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரமானது தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story