இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நிர்மலா (வயது 44). இவர் மகேந்திராசிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல நிறுவனத்துக்கு செல்வதற்காக பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த பெண்ணிடம் நிர்மலா லிப்ட் கேட்டு ஏறி கொண்டார். மகேந்திராசிட்டியில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியது. இதில் நிர்மலா நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு உப்பரபாளையத்தை சேர்ந்தவர் வடிவேலு(29). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 29–ந் தேதி வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் மப்பேடு சென்று விட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பேரம்பாக்கம் அருகே உள்ள நரசமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த வடிவேலுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அஜித் (20) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வடிவேலுவின் தந்தை குப்பன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story