பெண்ணை பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
பந்தலூர் தாலுகா பாட்டவயல், பெண்ணை, பிதிர்காடு பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பாட்டவயல், பெண்ணை, பிதிர்காடு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி கேரள மாநில கரையோரம் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த பகுதிகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா வனப்பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் முகாமிட்டு மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு சித்தராஜ் உள்ளிட்ட போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியவாறு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வனத்தில் வாழும் ஆதிவாசி மக்களை சந்தித்து சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என விசாரணை நடத்தினர். அவ்வாறு சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் கொடுப்பதாக ஆதிவாசி மக்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர்.
Next Story