செந்துறையில் டாஸ்மாக் கடை இடமாற்றத்தை கண்டித்து பெண்கள் உண்ணாவிரதம்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் டாஸ்மாக் கடை இடமாற்றத்தை கண்டித்து பெண்கள் உண்ணாவிரதம்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பொன்குடிக்காடு கிராமம். இந்நிலையில் பொன்குடிக்காடு மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை சேடகுடிக்காடு சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்ய பணிகள் நடந்து வருகிறது. இதற்கு பொன்குடிக்காடு பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து நேற்று பொன்குடிக்காடு பகுதியில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் போலீசார் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பெண்கள், எங்கள் ஊருக்கே டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும், மீறி திறந்தால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர்.
Next Story