ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தாசில்தார், 2 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற சில அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டியது உள்ளது.
சென்னை,
இந்திய தேர்தல் கமிஷன் செயலாளரான ராஜன் ஜெயின், தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற சில அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டியது உள்ளது. அதன்படி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி விஜயகுமார் (தேர்தல் பதிவு அதிகாரி), உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சேகர் (தாசில்தார்) ஆகியோரை இடமாற்றம் செய்யுங்கள். விஜயகுமார் மற்றும் சேகர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்யப்படவேண்டும்.
அந்த பணியிடங்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story