அம்பத்தூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு தனியார் கம்பெனி உரிமையாளர் பலி
அம்பத்தூர் அடுத்த ஒரகடம் ஐயங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 36). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியாக கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
ஆவடி,
அம்பத்தூர் அடுத்த ஒரகடம் ஐயங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 36). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியாக கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெனிபர் (32). இவர்களுக்கு செல்விபிரியா (8) என்ற மகளும், சேரன் (5) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த மாதம் 16–ந் தேதி ஹரிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. தொடர்ந்து உடல் நிலை மோசமானதால் 21–ந் தேதி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று முன்தினம் டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story