டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேதாரண்யத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
2 பேர் மயங்கி விழுந்தனர்போராட்டத்தில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் திடீரென மயங்கி விழுந்ததனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.