மும்பையில் சாக்குமூட்டையில் கட்டி பழைய ரூபாய் நோட்டுகளை வீசியவரை போலீசார் மடக்கி பிடித்தனர்
மும்பையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை சாக்குமூட்டையில் கட்டி வீசியவர் கைது செய்யப்பட்டார். நாக்பூரில் ரூ.53 லட்சம் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை,

சாக்குமூட்டையில்...
மும்பை தின்தோஷி கோர்ட்டு அருகில் உள்ள சபானா காம்பவுண்டு அருகே நேற்று மதியம் கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து ஒருவர் கையில் சாக்கு மூட்டையுடன் இறங்கினார். பின்னர் அந்த சாக்குமூட்டையை சாலையோரத்தில் வீசிவிட்டு தனது காரை நோக்கி சென்றார்.
இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடிச்சென்று அந்த சாக்குமூட்டையை திறந்து பார்த்தனர். அதில் கத்தை, கத்தையாக செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மூட்டையை அங்கு போட்டு சென்றவரை அவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தின்தோஷி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவரது பெயர் ஹிதேஷ் ராம்ஜி என்பது தெரியவந்தது. போலீசார் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியும் நடந்தது.
நாக்பூர்
நாக்பூர் சோட்டா தாஜ்பக் பகுதியில் சம்பவத்தன்று சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒரு காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்தவர்களிடம் இருந்த பையை வாங்கி திறந்து பார்த்தனர். அதில், கத்தை, கத்தையாக ரூ.53 லட்சம் மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள் இருந்தன.
இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த நோட்டுகளை காரில் கொண்டு வந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் வியாபாரிகள் என தெரியவந்தது. அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் மாற்றும் முயற்சியில் கொண்டு வந்து இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

Next Story