17 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 முலாம் பழங்கள்!


17 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 முலாம் பழங்கள்!
x
தினத்தந்தி 1 April 2017 8:15 PM IST (Updated: 1 April 2017 3:12 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் நாட்டில் 2 முலாம்பழங்கள் 17 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் நாட்டில் சாதாரணமாக ஒரு கிலோ முலாம்பழங்கள் அதிகபட்சமாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும்.

ஆனால், ஜப்பான் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ரக முலாம்பழத்தை அந்நாட்டு மக்கள் கிலோவுக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி ருசிக்கின்றனர்.

‘யுபாரி கிங்’ என அழைக்கப்படும் இந்த முலாம்பழங்கள் ஜப்பானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும் பழங்களுக்கு மட்டுமே ‘யுபாரி முலாம்பழம்’ என்ற பெருமை கிட்டும்.

இந்த முலாம்பழங்கள் ருசி மிக்கதாக இருக்கும் என்பதால் ஜப்பானியர்கள் இதற்கு அதிக விலை கொடுக்கத் தயங்குவதில்லை.

ஆனால் இரண்டே இரண்டு முலாம்பழங்கள் 21 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கு (ரூ. 17.60 லட்சம்) வாங்கப்பட்டிருப்பதுதான் பிரமிப்பாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த, முலாம்பழங்களை ஏலம் விடும் ஒரு நிகழ்ச்சியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் இந்த விலை கொடுத்து 2 முலாம்பழங்களை வாங்கியிருக்கிறார்.

அதாவது, ஒரு சொகுசு காரை வாங்கும் விலையைக் கொடுத்து இந்த முலாம்பழங்களை அவர் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ருசிமிக்க முலாம்பழங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த விலைக்கு வாங்கியிருக்கிறேன்’ என்றார்.

பிறந்தாலும் ஜப்பானில் விவசாயியாக பிறக்கணும்!


Next Story