தெருவில் சிதற விடப்பட்ட பணம்!


தெருவில் சிதற விடப்பட்ட பணம்!
x
தினத்தந்தி 1 April 2017 9:00 PM IST (Updated: 1 April 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

கனடாவில் ஒரு நகரத்தின் தெருக்களில் பணம் திணிக்கப்பட்ட கடித உறைகள் சிதறிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் உள்ள அனரிகோனிஷ் நகரத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

அந்நகரெங்கும் சுமார் 100 கடித உறைகள் இப்படிக் கிடந்திருக்கின்றன. அவை, கண்ணைக் கவரும் ‘பளிச்’சென்ற இளஞ் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. உறையினுள் 5 முதல் 50 டாலர் வரையிலான பணம் வைக்கப்பட்டிருந்தது.
அதைக் கண்ட மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ‘அற்புதமான அறக்கட்டளை’ என்ற சர்வதேச நிறுவனத்தின் செயல் இது எனத் தெரியவந்தது. வேண்டுமென்றே அவர்கள் நகரெங்கும் பண உறைகளைத் தூவியிருக் கிறார்கள்.

இப்படி பணத்தைப் பெறுபவர்கள் அதை ஒரு நல்ல செயலுக்காக உபயோகிப்பார்கள் என தாங்கள் நம்புவதாக அறக்கட்டளை அறங்காவலர் ஷான் வில்கி கூறினார்.

தங்களின் சமூக சேவைப் பணிகளுக்காக பல தரப்பினரும் நன்கொடை வழங்குவதாகவும், அதில் ஒரு பகுதியை சமூகத்துக்கே திருப்பி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, மாதந்தோறும் ஆயிரம் டாலர்கள் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

‘என்னைத் திற’ என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்தக் கடித உறைகளில் 5, 10 அல்லது 20 டாலர் தாள்கள் காணப்பட்டன. அத்துடன், இதை முன்னோக்கி கொடுக்கவும் என்று மற்றொரு குறிப்பும் இடம்பெற்றிருந்தது.


Next Story