நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,400 டன் தவிடு வந்தது
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
நாமக்கல்,
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 40 வேகன்களில் 2,400 டன் தவிடு வாங்கி வரப்பட்டன. இந்த தவிடு மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கோழிப்பண்ணைகளுக்கு நாமக்கல் ரெயில்வே ‘கூட்ஷெட்’ சங்க லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த தவிடு மூட்டைகள் நாமக்கல்லுக்கு சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story