இன்று, போலியோ சொட்டு மருந்து முகாம் 1,172 இடங்களில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 1,172 இடங்களில் நடக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 1,172 இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
போலியோ சொட்டு மருந்துதமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை 7 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு முகாம்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரத்து 62 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,172 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, பள்ளிகள், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
30–ந் தேதிதூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருச்செந்தூர் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 120 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்தாலும், மீண்டும் கொடுக்கலாம். காய்ச்சல், சளி உள்ளிட்ட வியாதிகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம். 2–வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 30–ந்தேதி நடக்கிறது.
இந்த முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து கொடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.