வாலாஜா அருகே சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை 50 பேர் கைது


வாலாஜா அருகே சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை 50 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 8:38 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவை அடுத்து உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலாஜா,

வாலாஜாவை அடுத்து உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ரகுமான் லியாகத், நிர்வாகிகள் முகமது காசிம், சம்பத், ராமு, கிருஷ்ணமூர்த்தி, விமலா, ராஜேஷ் உள்பட 50 பேரை, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.


Next Story