3–வது நாளாக நீடித்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


3–வது நாளாக நீடித்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 1 April 2017 10:07 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

மதுரை,

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன பதிவுக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 3–வது நாளாக நேற்றும் நீடித்தது. மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரம் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 3–வது நாளாக மதுரையில் லாரிகள் இயக்கப்படாததால் அந்தந்த பகுதிகளில் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story