சுங்க சோதனை சாவடியில் சாலை மறியலுக்கு முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது
விஜயமங்கலம் சுங்க சோதனை சாவடியில் சாலை மறியலுக்கு முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 24 பேர் கைது
பெருந்துறை
தமிழ்நாட்டில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சோதனை சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியினர் 24 பேர் கொடியுடன் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலுக்கு முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Next Story