பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூரில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அந்தியூர்,
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வேறுபாடின்றி உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அந்தியூர் கிளை சார்பில் உண்ணாவிரத போராட்டம் அந்தியூரில் நேற்று நடந்தது.
போராட்டத்துக்கு வட்டார தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இ.வின்சென்ட், மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள் சுந்தரரூபன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னதாக செயலாளர் குருமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் ராஜகோபாலன் நன்றி கூறினார்.
Next Story