கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடி மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை


கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடி மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 2 April 2017 3:45 AM IST (Updated: 2 April 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடி மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை 11 பேர் கைது

கொடைரோடு,

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கவரி கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு சுங்கச்சாவடி மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பெரியசாமி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story