சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் 110 மதுக்கடைகள் மூடப்பட்டன 17 தனியார் பார்களையும் மூட உத்தரவு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் 110 மதுக்கடைகள் மூடப்பட்டன 17 தனியார் பார்களையும் மூட உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2017 1:11 AM IST (Updated: 2 April 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை

விருதுநகர்,

சுப்ரீம் கோர்ட்டு, தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசு மேலும் கால அவகாசம் கோரியதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தர மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அந்தந்த மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தால் நடத்தப்படும் 168 மதுக்கடைகளில் 90 மதுக்கடைகள் மாநில நெடுஞ்சாலைகளிலும் 20 மதுக்கடைகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலைகளின் இருபுறத்திலும் 500 மீட்டர் தூரத்திற்குள் இருப்பதாக கண்டறியப்பட்டு அவைகள் மூடப்பட்டன.

அறிவுறுத்தல்

மேலும் 17 தனியார் மதுபான பார்களையும் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பார்கள் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய நகரங்களில் உள்ளன. இந்த மதுபான பார்களில் எக்காரணம் கொண்டும் மதுவிற்பனை மேற்கொள்ள கூடாது என்றும் அவர்களிடம் இருப்பில் உள்ள மதுபானங்களை மறு உத்தரவு வரை விற்பனை செய்யவோ அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் நேற்று காலை அறிவுறுத்தியுள்ளது.

மூடப்பட்ட மதுக்கடைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வேறு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story