திருநாகேஸ்வரத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருநாகேஸ்வரத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு உள்ள நாகநாதசாமி கோவில் எதிரே மதுக்கடை உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மதுக்கடையை திருநாகேஸ்வரம் அசோக்நகரில் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அசோக்நகர் பகுதி பொதுமக்கள், மதுக்கடையை அமைக்க அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திருநாகேஸ்வரம் மணல்மேட்டுத்தெருவில் மதுக்கடையை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியில் மதுக்கடைக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த திருநாகேஸ்வரம் மணல்மேட்டுத்தெரு, எடத்தெரு, மேலத்தெரு பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருநாகேஸ்வரம் மேலவீதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், குமரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பில் போலீசாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் மணல்மேட்டுத்தெருவில் மதுக்கடை அமைக்கப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக கும்பகோணம்-காரைக்கால் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் ஆடுதுறை ரெயில்வேகேட் அருகில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆடுதுறை- திருநீலக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு அருகே நெய்வாசலில் தஞ்சை-மன்னார்குடி நெடுஞ்சாலையின் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடை மூடப்பட்டது. இதற்கு பதிலாக நெய்வாசல் அருகே குலமங்கலம் தாந்தோணி கிராமத்தில் மதுக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தில் மதுக்கடை திறக்கப்பட இருந்தது. இந்த நிலையில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, குலமங்கலம் தாந்தோணி கிராம மக்கள் நேற்று ஒரத்தநாடு-நெய்வாசல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை திறக்கக்கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையின்போது உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் கிராம மக்கள், சாலை மறியலை கைவிட்டனர்.

Next Story