கல்யாண ரெங்கநாதர் கோவிலில் திருவேடுபறி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் திருவேடுபறி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆக்கூர்,
சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கல்யாண ரெங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று திருவேடுபறி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உற்சவர் வயலாளி மணவாள பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இரவு பெருமாள் சிம்ம வாகனத்திலும், ஆழ்வார் வெள்ளி மங்களகிரியிலும் புறப்பாடு நடைபெறுகிறது. 8-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருவேடுபறி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு பெருமாள்-தாயார் திருவாலியில் உள்ள லெட்சுமி நரசிம்மர் கோவிலில் எழுந்தருளி அங்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு திருமங்கையாழ்வார் தங்கக்குதிரை வாகனத்தில் வேதாராஜபுரம் என்ற இடத்தில் எழுந்தருளுகிறார். அப்போது திருவேடுபறி உற்சவம் நடைபெறுகிறது. 9-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், தீர்த்த வாரியும் நடக்கிறது.

Next Story