மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகரை தாக்கியவரை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது40). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சரவணனை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சரவணன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் சரவணனை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் வரம்பியம் ஜோதிபாசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, கட்சியின் நகரச்செயலாளர் கோபு, முன்னாள் நகரச்செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், சரவணனை தாக்கியவரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேச்சுவார்த்தை
இதில் விவசாய சங்க பொறுப்பாளர் டி.வி.பன்னீர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, பி.என்.தங்கராசு , சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story