கோர்ட்டு உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் 61 மதுபான கடைகள் மூடப்பட்டன


கோர்ட்டு உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் 61 மதுபான கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் 61 மதுபான கடைகள் மூடப்பட்டன.

கரூர்,

தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மதுபான கடைகள் மார்ச் மாதம் 31-ந் தேதி மூட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த 61 மதுபான கடைகள் நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் மூடப்பட்டன. இது குறித்து கரூர் மாவட்ட மதுபான கடை பொது மேலாளர் பழனிதேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இடம் தேர்வு

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 93 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. கோர்ட்டு உத்தரவுப்படி சாலையோரம் இருந்த 61 மதுபான கடைகள் கடந்த 31-ந் தேதி இரவுடன் மூடியுள்ளோம்.

மீதம் உள்ள 32 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வருகிறோம். அதன்படி முதல் கட்டமாக 12 கடைகளுக்கு மாற்று கட்டிடம் பார்த்துள்ளோம்.

10 கடைகளுக்கு கட்டிடப்பணி நடந்து வருகிறது. 21 கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்துள்ளோம். மீதியுள்ள கடைகளுக்கும் இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story