சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 90 மதுக்கடைகள் மூடப்பட்டன
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 90 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 179 மதுக்கடைகள்(டாஸ்மாக்) செயல்பட்டு வந்தன. கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எடப்பாடி.பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது மேலும் 9 மதுக்கடைகள் மூடப்பட்டன.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 156 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைஅருகில் உள்ள மதுபான கடைகளை கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதில் திருத்தம் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
90 மதுக்கடைகள் மூடப்பட்டன
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 3,400 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருவரங்குளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, திருமயம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 90 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும் 14 கடைகள் இருந்ததில் தற்போது ஒரு கடை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13 கடைகளும் மூடப்பட்டன. கறம்பக்குடி பேரூராட்சியில் மட்டும் எந்தவொரு மதுக்கடையும் மூடப்படவில்லை.
மாற்று இடம் தேர்வு
இதுகுறித்து மூடப்பட்ட மதுக்கடையில் பணியாற்றிய ஒருவர் கூறுகையில், கடை மூடப்பட்ட 15 நாட்களில் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு புதிதாக மதுக்கடையை திறக்க வேண்டும். இந்த கடை திறந்த பிறகுதான் மூடப்பட்ட கடைகளில் இருந்த மது பாட்டில்களை புதிய கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

Next Story