பணியாளர்கள் அல்லாத நபர்கள் மின்வாரிய பணிகளை மேற்கொள்ளக்கூடாது
பணியாளர்கள் அல்லாத நபர்கள் மின் வாரிய பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் டேவிட் ஜெபசிங் கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை தவிர்க்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டபோதிலும், குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பொதுமக்களின் அஜாக்கிரதை, கவனக்குறைவு மற்றும் விதிகளை மீறிய செயல்களால் 6 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
எனவே விபத்துகளை தடுக்க, உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதை, சர்வீஸ் வயரின் அடியில் டிப்பர் லாரிகளில் பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது. மின் இணைப்பு பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர் மூலம் மட்டும் செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துதல் அவசியம். மின் சாதன பொருட்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 மின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேல் நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போதும், அலங்கார பந்தல் மற்றும் சீரியல் விளக்குகள் அமைக்கும்போதும் மின் பாதைகளின் அருகே போதுமான இடைவெளிவிட்டு பணி மேற்கொண்டால் விபத்தை தடுக்கலாம். மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும் எனில் மின்சார வாரியத்தை அணுகவும்.
திருவிழாக்கள் மற்றும் கோவில் கொடை நிகழ்ச்சிகளில் தேர் பவனி மற்றும் சப்பரம் தூக்கும்போது எக்காரணம் கொண்டும் மின்சார கம்பிகளை, இரும்புக்கம்பி மற்றும் இதர பொருட்களால் தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரியத்தை அணுகி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
பொறுப்பு ஏற்காது
மேலும் நுகர்வோர் பகுதியில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க இ.எல்.சி.பி. பொருத்த வேண்டும். மின் வாரிய பணியாளர்கள் அல்லாத நபர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அமைப்புகளில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு மேற்கொண்டால் தண்டனைக்குரிய செயலாகும்.
இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களே முழு பொறுப்பு ஆவார்கள். இதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story