முதல் கட்டமாக கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த 47,972 பேருக்கு "ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு”கள்


முதல் கட்டமாக கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த 47,972 பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு”கள்
x
தினத்தந்தி 2 April 2017 3:45 AM IST (Updated: 2 April 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக கல்குளம் தாலுகாவைச் சேர்ந்த 47,972 பேருக்கு “ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு“கள் வழங்கும் பணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,


‘ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு`


கல்குளம் தாலுகா ஆளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு மின்னணு ரே‌ஷன் கார்டுகளை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்து கொண்டு 207 ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய மின்னணு ரே‌ஷன் கார்டில் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டுகளின் எண்கள் மற்றும் செல்போன் எண்கள் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்ற பணிகளும் tnpds என்ற இணையதளத்தின் மூலம் மாற்றம் செய்து கொள்ள முடியும். மேலும் தாங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு முன்பாக, பெயர் மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தந்தார்கள்.

முதல் கட்டமாக...

தற்போது தமிழக அரசு செயல்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் மூலம் மேற்கண்ட பணிகளை எளிய முறையில் செய்து கொள்ள முடியும். முதல் கட்டமாக கல்குளம் தாலுகாவுக்கு 47,972 மின்னணு ரே‌ஷன் கார்டுகள் வந்துள்ளன. அகஸ்தீஸ்வரம், தோவாளை மற்றும் விளவங்கோடு ஆகிய தாலுகாக்களுக்கு மின்னணு ரே‌ஷன் கார்டுகள் பெறப்பட்ட உடன் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி சின்னம்மாள், வட்ட வழங்கல் அதிகாரிகள் வினோத் (கல்குளம்), கோலப்பன் (அகஸ்தீஸ்வரம்) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story