காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடை பார் முற்றுகை


காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடை பார் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-02T02:29:06+05:30)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தை அடுத்த சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது.

காஞ்சீபுரம்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தை அடுத்த சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது. ஆனால் அருகில் உள்ள பாரில் வைத்து மது விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடை பாரை முற்றுகையிட்டு அதனை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பார் ஊழியர்கள் பாரை மூடிவிட்டனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story