சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் உடற்பயிற்சி கூடம்


சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் உடற்பயிற்சி கூடம்
x
தினத்தந்தி 2 April 2017 3:30 AM IST (Updated: 2 April 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசார் உடற்பயிற்சி செய்யும் வகையில் உடற்பயிற்சி கூடம்

ஆலந்தூர்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசார் உடற்பயிற்சி செய்யும் வகையில் இன்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உடற்பயிற்சி கூடத்தை பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் கல்யாண் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் மீனம்பாக்கம் உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார், விமான நிறுவன சென்னை அதிகாரி முருகேசன், விமான நிலைய பாதுகாப்பு துணை ஆணையர் சஞ்சய் சர்மா, மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் ஆனந்த் சக்சேனா, விமான நிலைய ஆணைய துணை இயக்குனர் அனில் கார்க் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story