தூக்க மாத்திரை கொடுக்க மறுத்த மருந்துக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
தூக்க மாத்திரை கொடுக்க மறுத்த மருந்துக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வாலிபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு,

அரிவாள் வெட்டு
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் கே.எம்.ரோட்டை சேர்ந்தவர் சோமேஷ். இவர் அதேப்பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோமேஷ் தனது கடையில் இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் சோமேசிடம் தூக்க மாத்திரை கேட்டு உள்ளனர். ஆனால் சோமேஷ் தூக்க மாத்திரை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் சோமேசுக்கும், அந்த 3 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அந்த 3 வாலிபர்களும் சேர்ந்து சோமேசை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சோமேசை வெட்டினார். இதில் சோமேசின் தலையில் வெட்டு விழுந்தது.
வலைவீச்சு
இதனால் ரத்தவெள்ளத்தில் சோமேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் சோமேசை மீட்டு சிகிச்சைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story